search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நஷ்ட ஈடு"

    இங்கிலாந்து விமானத்தில் லக்கேஜ் மாயமானதால் சென்னை வியாபாரிக்கு ரூ.90 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பெசன்ட்நகரை சேர்ந்தவர் சுமந்த் சுப்ரமணியன். வர்த்தகரான இவர் மருத்துவ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தனது மனைவியுடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் சென்றார்.

    இவர்கள் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் வழியாக வாஷிங்டன் சென்றனர்.

    சென்னையில் இருந்து புறப்பட்ட போது பல முக்கியமான அலுவலக ஆவணங்கள், சி.டி.க்கள், மருத்துவ அறிக்கைகளையும், பொருட்களையும் உடன் 3 பேக்குகளில் எடுத்து சென்றனர்.

    விமானம் அமெரிக்காவின் வாஷிங்டன் டல்லெஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது அவர்கள் எடுத்து சென்றவற்றில் ஒரு ‘பேக்’கை மட்டும் காணவில்லை. அதில் சுமந்த் சுப்ரமணியன் மனைவிக்கு சொந்தமான ஆவணங்கள், டிசைனர் கைப்பை, 50 டிசைனர் துணிகள், விலை உயர்ந்த ஆடைகள், அழகு சாதன பொருட்கள், ஆபரணங்கள், கண் கண்ணாடிகள், மற்றும் தங்க நகைகள் இருந்தன.

    அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம். இச்சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நடந்தது.

    அதை தொடர்ந்து தனது லக்கேஜ் மாயமானது குறித்து கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சுமந்த் சுப்ரமணியன் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு எந்தவித பதிலும் இல்லை.

    எனவே சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் விமானத்தில் ‘பேக்’ தொலைந்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் சேவையில் குறைபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனக்கு ரூ.19 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன மேலாளர் பதில் அளித்து இருந்தார். அதில், “விமான சேவையில் எந்த குறைபாடும் வைக்கவில்லை. 1972-ம் ஆண்டு விமான சட்டப்படி புகார்தாரருக்கு விமான நிறுவனம் நஷ்டஈடு எதுவும் வழங்க தேவை இல்லை என தெரிவித்து இருந்தார்.

    ஆனால் இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு அமர்வின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர் கே.அமலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதன்படி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் பயணி சுமந்த் சுப்ரமணியனுக்கு ரூ.90 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டனர்.

    அதில், காணாமல் போன லக்கேஜில் இருந்த பொருட்களுக்கு ரூ.50 ஆயிரமும், பயணியின் மன உளைச்சலுக்கு ரூ.35 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    தவறான அறுவை சிகிச்சையால் மகன் இறந்த 20 ஆண்டுக்கு பிறகு தாயாருக்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சேலத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி கண்ணன், இவரது மகன் கே.ரவிக்குமார் (28). இவர் கடுமையான காது வலியால் அவதிப்பட்டார்.

    எனவே கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் காது, மூக்கு, தொண்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்காக ஈஸ்வரி கண்ணன் ரூ.21,600 கட்டணம் செலுத்தினார். இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் இரவு ரவிக்குமாருக்கு ஆபரேசன் நடத்தப்பட்டது.

    அப்போது ரவிக்குமாருடன் அவரது சகோதரி இருந்தார். ஆனால் அவரிடம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆபரேசன் முடிந்த ஒரு வாரத்தில் அவர் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் அவர் கடுமையான தலை வலியால் அவதிப்பட்டார். எனவே, அவரை பிப்ரவரி 15-ந்தேதி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாட்களுக்கு பிறகு அவர் மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து சென்னை நுகர்வோர் கோர்ட்டில் ரவிக்குமாரின் தாயார் ஈஸ்வரி கண்ணன் புகார் செய்தார். தவறான ஆபரேசன் மற்றும் சிகிச்சையால் தனது மகன் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

    வழக்கு விசாரணை நுகர்வோர் கோர்ட்டு தலைவர் கே.ஜெயபாலன் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடந்தது. இறுதியில் ஈஸ்வரிகண்ணனுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

    ரவிக்குமார் மரணம் அடைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. உடனே வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் தம்பதியின் பொருட்களை திருடியது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு வடக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க தேசிய நுகர்வோர் கமி‌ஷன் உத்தரவிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் கணவன்- மனைவி பயணம் செய்தனர். அவர்கள் விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பெட்டி வைத்திருந்தனர். அப்போது அந்த பெட்டியில் அத்துமீறி ஏறிய பிச்சைக்காரன் பெட்டியை உடைத்து அதில் இருந்த பொருட்களை திருடிச்சென்று விட்டான். இச்சம்பவம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

    இது குறித்து தேசிய நுகர்வோர் கமி‌ஷனிடம் தம்பதியினர் புகார் செய்தனர். ரெயில்வேயின் கவனக்குறைவு காரணமாக முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிய பிச்சைக்காரன் தனது பொருட்களை திருடிச் சென்று விட்டதாக புகார் கூறி இருந்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் கமி‌ஷன், தம்பதிக்கு வடக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.#tamilnews
    அமெரிக்காவில் டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் பெண்களுக்கு மிக்சிகன் பல்கலைக்கழகம் ரூ.3250 கோடி நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டது.#LarryNassar #MichiganStateUniversity
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக லார்ரி நஸ்சார் (54). பணிபுரிந்தார்.

    இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்டதாக 332 பெண்கள் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர மிக்சிகன் பல்கலைக்கழகம் விரும்பியது.

    பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் ஜேட் கபூயா, அய்ல்ஸ்டீபன்ஸ், காலசிஸ்மூரே

    அதை தொடர்ந்து டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன் வந்தது. அதன்படி ரூ.3250 கோடி வழங்க ஒப்புக்கொண்டது.

    இத் தகவலை பல்கலைக் கழக குழு தலைவர் பிரையன் பிரஸ்லின் தெரிவித்துள்ளார்.#LarryNassar #MichiganStateUniversity
    பாலியல் வன்கொடுமையால் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. #Centralgovt
    புதுடெல்லி:

    பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு போன்ற பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்டஈடு வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் இந்த நஷ்ட ஈட்டின் தொகை மாறுபடுகிறது.

    எனவே, குறைந்த பட்சம் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி மத்திய சட்ட சேவை வாரியம் மத்திய அரசுடன் கலந்து பேசி புதிய நஷ்டஈடு திட்டத்தை உருவாக்கி உள்ளது.

    இதன் மூலம் பாலியல் வன்கொடுமையில் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் பலரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் நபர்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.

    இதன்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், இயற்கைக்கு மாறான பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்படும் நபருக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், பாலியல் குற்றத்தில் கர்ப்பம் அடைந்தால் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும், கற்பழிப்பில் கர்ப்பமானால் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சம் வரையிலும்,

    திராவகம் வீச்சு மற்றும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டால் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சம் வரையிலும், 50 சதவீதம் காயம் அடைந்திருந்தால் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரையிலும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்ட வரையரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் இது போன்ற குற்றங்களில் ஆண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்கள் வரையரை செய்யவில்லை.

    இது சம்பந்தமாக நீதிபதிகள் மதன்லோகூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கூறும் போது, மைனராக உள்ள சிறுவர்கள் இது போன்ற குற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கும் அம்சங்களை சேர்க்கும்படி உத்தரவிட்டனர். #Centralgovt
    ×